பெண்ணை ஏமாற்றிய வாலிபர் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் கிராமத்தில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் ஆசிலாபுரம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம். இந்நிலையில் மாரீஸ்வரன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
ஆனால் தற்போது நான் வேறு சமூகத்தை சேர்ந்தவள் என்பதால் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். இதனையடுத்து மாரீஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் என் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாரீஸ்வரன், பெற்றோர் பரமசிவம்-ஜெயமாதா, மணிகண்டன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.