மதுரையில் மது பாட்டில்கள் வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்தது. இதனால் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மணப்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார்.
இவர் நாகமலைபுதுக்கோட்டையில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மது பாட்டில்கள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பிரபுவை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்து 14 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர்.