சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜீவா மற்றும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து அப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜீவா மற்றும் கண்ணனை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.