சட்ட விரோதமாக மது பாட்டிகளை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவரடியார் குப்பம் பகுதியில் மணலூர்பேட்டை காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை கைது செய்ததோடு, அவர் கடத்திய 144 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.