Categories
தேசிய செய்திகள்

“இவரல்லவா மனிதர்” ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை…. இந்து கோவிலுக்கு தானம் கொடுத்த முஸ்லீம்….!!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் புறசபையின் முன்னாள் தலைவர் அஜீம் அகமதுஷா. தொழில்அதிபரான இவருக்கு சொந்தமாக சேடம்-யாதகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1,200 சதுர அடி நிலம் உள்ளது. அதன் அருகே உள்ள அனுமன் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த காம்பவுண்டு சுவர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து, காம்பவுண்டு சுவர் அமைக்க பக்கத்தில் உள்ள அஜீம் அகமதுஷாவுக்கு சொந்தமான நிலத்தை அனுமன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் விலைக்கு கேட்டனர்.

அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அதே நேரத்தில் விலைக்கு கொடுக்க மாட்டேன் என்றும், தானமாக கொடுப்பதாகவும் அஜீம் அகமதுஷா கூறினார். அதன்படி, தனக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலத்தை அனுமன் கோவிலுக்கு அஜீம் அகமதுஷா கொடுத்துள்ளார்.

Categories

Tech |