ஹாஸ்டல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி ரிலீசாகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பிரியா பவானி சங்கர் வலம் வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் தற்போது 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இவர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஹாஸ்டல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த திரைப்படத்தை சுமந்த் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் அண்மையில் ஒரு பேட்டியளித்தார். அதில் இயக்குனர் ஹாஸ்டல் திரைப்படத்தின் கதையை கூறியபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இந்த கதையில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் என்னிடம் தெரிவித்தார். அதன்பிறகு நான் நடிகர் அசோக்செல்வனுக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு ஹாஸ்டல் திரைப்படத்தின் கதையை கூறினேன். அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அசோக் செல்வன் ஹாஸ்டல் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இருப்பினும் என்னிடம் கொண்ட நட்பிற்காக மட்டுமே இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.