இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி வரும் படம் டக்கு முக்கு திக்கு தாளம் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி வரும் படம் டக்கு முக்கு திக்கு தாளம். இப்படத்தில் அவரது மகள் விஜித் பச்சான் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை கேட்ட சோனி ஆடியோ நிறுவனம் அவற்றை வாங்கி வெளியிட்டுள்ளது. தங்கர்பச்சான் முதல்முறையாக இளைஞர் கொண்டாடும் வகையில் இளமை ததும்பும் பாடல் வரிகளை வித்தியாசமாக எழுதி இருக்கிறார்.
மேலும் இப்பாடலை கேட்டவுடனேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தங்கர்பச்சான் இப்படி ஒரு பாடலை எழுதினாரா என்று வியந்து கேட்கிறார்கள். இப்பாடல் புகழ் பெற்ற இசையமைப்பாளர் தேவா தனது காந்தக் குரலால் பாடி அசத்தியுள்ளார். இதற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இதனை அடுத்து விஜித் பச்சான் ஹீரோவாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் ஹீரோவுக்கு இணையாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரதில் நடிக்கிறார்.