Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரின் தகுதி என்ன..?” அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே… கிருஷ்ணப்பா கவுதம் பெற்ற புதிய சாதனை…!!

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டு கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனையை படைத்துள்ளார். 

ஐபிஎல் தொடரின் 14வது போட்டி வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. தற்போது சென்னையில் இதற்கான மினி ஏலம் நடக்கிறது. இதில் வெளிநாட்டு வீரர்கள் 22 பேர் உட்பட 57 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 8 அணிகளுக்கும் சேர்த்து 143 கோடியே 69 லட்சத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஐபிஎல் எலத்திலேயே கிருஷ்ணப்பா கௌதம் இம்முறை புதிய சாதனையை படைத்திருக்கிறார். அதாவது இவரின் அடிப்படை தொகை 20 லட்சம் ரூபாய். ஆனால் தற்போது சென்னை அணி இவரை 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமையை கிருஷ்ணப்பா கவுதம் பெற்றிருக்கிறார்.

தற்போது வரை கடந்த 2018 ஆம் வருடத்தில் குணால் பாண்ட்யா 8 கோடியே 80 லட்சத்திற்கு எடுக்கப்பட்டிருந்தது தான் அதிக விலையாக இருந்தது. அதன் பின்பு சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த 32 வயதான கிருஷ்ணப்பா கவுதம் சுழற்பந்து வீச்சு மற்றும் ஆல் ரவுண்டர் வீரர். இதற்கு முன் இவர் ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |