75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பாக துண்டு பிரச்சாரம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மரப்பாளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் முன்னால் காங்கிரஸ் மாநில தலைவர் இ பி கே எஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சிதம்பரம் பதவியேற்றால் அதனை முழுமையாக வரவேற்கின்றேன். மேலும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் சிறப்பு வீசியது பாஜகவினர் என்றாலே அவர்கள் வீசிய பொருளில் இருந்து தெரிகின்றது.
டாஸ்மாக் ஒழிக்கப்படும் பட்சத்தில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கள்ளச்சாராயம் பெருக வாய்ப்பு ஏற்படும். மதுபான கடையை ஒழிப்பது என்பது சாத்தியம் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியுள்ளார் என்று கூறுவது அவரது அடுத்த படத்திற்கான விளம்பரத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தான் பாஜக முன்னிலைப்படுத்த முடியும். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அரசியலுக்கு வரப்போகிறேன் என தெரிவித்துவிட்டு பின்வாங்குவது அவரது குணம் என தெரிவித்துள்ளார்.