தமிழில் ‘நாடோடி’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஜெயக்குமாரி. கவர்ச்சி நடிகை என்று அழைக்கப்படும் அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்திலேயே கவர்ச்சியான உடைகள் அணிந்து ரசிகர்களை வசிகரித்தவர் நடிகை ஜெயக்குமாரி. இவர் வில்லி மற்றும் கவர்ச்சி படங்கள் அதிகமாக நடித்துள்ளார். இவருக்கு தற்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. தன்னுடைய மகனோடு சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு, 2 சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பழம்பெறும் நடிகையான ஜெயக்குமாரி உதவிக்கு யாரும் இல்லாமல் உயிருக்கு போராடிவரும் நிலையை அறிந்து நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் அவருக்கு உதவ முன்வர வேண்டும் என்கிற உதவிக்கு வர வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.