தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் கிணத்துகடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து தயாநிதிமாறன் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அதிமுக அரசு தவறிவிட்டது. மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா எங்களுக்கு அம்மா. மோடி எங்கள் அப்பா. என்ன ஒரு உறவுமுறை பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள் என்று கூறியுள்ளார்.