‘புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஸ்ரீ வள்ளி’ பாடலை பாடிய சித் ஸ்ரீராம்மை பாராட்டி அல்லு அர்ஜுன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுகுமார் இயக்கும் இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அஜய், பகத் பாசில், தனஞ்செயா, சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனைத்து பாடல்களும் மக்களிடையே இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சமந்தா நடனம் ஆடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் சர்ச்சையாக பேசப்பட்டாலும் செம ஹிட்டானது.
மேலும் புஷ்பா திரைப்படத்தில் பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் ‘ஸ்ரீ வள்ளி’ என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலை பாடிய சித் ஸ்ரீராம் பற்றி பாராட்டி அல்லு அர்ஜுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியதாவது, “எனது சகோதரர் சித் ஸ்ரீராம் ஒரு நிகழ்ச்சியின் போது ஸ்ரீவில்லி பாடலை பாடினார் அப்பொழுது பின்னணி இசை இசைக்கப்படும் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனால் எந்த ஒரு இசையுமின்றி பாடினார். அவர் பாடியதைக் கேட்ட நான் அவரின் குரலில் மயங்கினேன். இவர் குரலில் ஏதோ வசியம் இருக்கிறது என்பது ஒன்றே என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.இவருக்கு பின்னணி இசை எதுவும் தேவையில்லை அவரே இசை தான்” என்று பதிவிட்டுள்ளார்.