Categories
உலக செய்திகள்

இவருக்கு வழங்கப்படுமா… 2022 அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு..?

2022 ஆம் ஆண்டு  அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு  வருகிறது .

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில், நம் நாட்டின் தேச தந்தையான காந்தி பற்றிய படத்தை இயக்கியதற்காக ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர் டேவிட் ஆட்டன்பரோ , போப்பாண்டவர் பிரான்சில்,  உலக சுகாதார அமைப்பு,  பெலரசின்  மனித உரிமை போராளி ஷிகோனஸ்கயா , உள்ளிட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன .  இதில் உலகின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான எம்.பி.க்கள் பரிந்துரைகளை  செய்யலாம்.

அதில் குறிப்பாக  நார்வே  நாட்டு  எம்.பி.க்களின் பரிந்துரைகள்  அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுவது  வழக்கம் . அதன்படி  இந்த ஆண்டு நார்வேயின் பரிந்துரைகளில் டேவிட் அட்டன்பரோ உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும்  2022 அமைதிக்கான நோபல் பரிசு  பெறுபவர்களின்  பெயர்கள் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படுகிறது .

Categories

Tech |