மலையாளத்தில் பிரித்வி ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் லூசிபர். இந்த படத்தை இப்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இவற்றில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கிவருகிறார். இந்த படத்தின் கதா நாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சென்ற வருடம் நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திற்கு காட்ஃபாதர் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். காட்ஃபாதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ அண்மையிகல் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடந்துவரும் காட்ஃபாதர் படத்தின் பாடல் ஒன்று நிறைவுபெற்று இருப்பதாக இயக்குனர் மோகன்ராஜா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு பிரபு தேவாவுடன் பணிபுரிந்தது என்ன ஒரு அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.