Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவருடைய வயது 19 அல்ல 21…! உண்மையை உடைத்த “மராட்டிய வாரியம்”…. என்ன செய்யப்போகிறார் “CSK வீரர்”…? விசாரணையில் இறங்கிய “பிசிசிஐ”…!!

பெங்களூரில் வைத்து நடைபெற்ற ஐபிஎல் மிக ஏலத்தில் சிஎஸ்கே அணி 1.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்த ராஜ்வர்தனின் உண்மையான வயது 19 அல்ல 21 என மராட்டிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஓம் பிரகாஷ் பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரில் வைத்து ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த 13 ஆம் தேதி நடை பெற்றுள்ளது. இதில் 1.5 கோடி கொடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் உலக கோப்பை தொடரில் அதிவேகமாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்த மராட்டிய வேகப்பந்துவீச்சாளர் ராஜ் வரதனை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் மராட்டிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஓம்பிரகாஷ் பிசிசிஐக்கு ராஜ்வர்தனின் வயது 19 அல்ல 21 என்று பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதாவது இவருடைய உண்மையான பிறந்தநாள் ஜனவரி 10, 2001 என்றும் அவர் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது தனது பிறந்தநாளை நவம்பர் 10, 2002 என மாற்றியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் மராட்டிய கிரிக்கெட் வாரிய தலைவர் எழுதியுள்ளார். இவர் தில்லுமுல்லு செய்து தான் ஒரு நாள் உலக கோப்பை தொடரில் இடம்பிடித்து விளையாடியுள்ளதாகவும், அவருக்கு வாழ்நாள் தடை வழங்க வேண்டுமென்றும் மராட்டிய கிரிக்கெட் வாரிய தலைவர் பிசிசிஐயிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார். இவ்வாறு இருக்க மராட்டிய கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரின் பேரில் ராஜ்வர்தன் மீது விசாரணை மேற்கொள்ள உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |