Categories
தேசிய செய்திகள்

“இவருல்லாய்யா மனுஷன்” சம்பளம் வேண்டாம்…. ரூ.24 லட்சத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்….!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லாலன் குமார்(33). இவர் 2019 ஆம் வருடம் செப்டம்பரில் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் பெற்ற மொத்த சம்பளமான ரூபாய் 24 லட்சத்தை பல்கலைக்கழகத்திடம் திருப்பி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தான் பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்குவதற்கு என்னுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளின் போது கூட இந்தி வகுப்பிற்கு ஒரு சில மாணவர்கள் வந்தனர். ஐந்து வருடங்கள் கற்பிக்காமல் சம்பளம் வாங்கினால் அது என்னுடைய கல்வி மரணம் அடைந்ததற்கு சமமாகும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |