தேனியில் நதிக்கரையோரத்தில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரிலிருக்கும் சுரபி நதிகரையின் ஓரத்தில் சுமார் 35 வயது மதிப்புடைய வாலிபரின் பிணம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரிக்கையில் அவர் அய்யம்பட்டியில் வசித்துவந்த சுருளி என்பது கண்டறியப்பட்டது. மேலும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.