உக்ரைனில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தேசிய பாதுகாப்பு படை வீரரான ஆர்ட்டெமி யூர்யோவிச் என்ற இளைஞர், Dnipro நகரிலுள்ள இயந்திர தயாரிப்பு தொழிற்சாலை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் திடீரென தன்னை சுற்றி இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் சக வீரர்கள் 4 பேரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக அந்த வீரர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுவிட்டதாகவும், அன்மையில்தான் தேசிய பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.