தேனியில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசித்து வந்த இசைவாணி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணத்தை சிவகுமாரின் குடும்பத்தார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே சிவகுமாரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்துவிட்டார்.
இதனால் மனமுடைந்து வந்த சிவகுமார் ஒரு கட்டத்தில் மதுவினை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை கண்டித்த இசைவாணிக்கும், சிவகுமாருக்குமிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனையடுத்து சிவகுமார் இல்லத்தில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெரியகுளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.