கரூர்மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜி பங்கேற்று மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். அம்மாவட்டத்திலுள்ள 67 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பு பயின்ற 4019 மாணவர்கள், 4458 மாணவிகள் உட்பட மொத்தம் 8477 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி 8477 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 30 லட்சத்து 52,661 மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். போக்குவரத் துதுறையில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒட்டி செந்தில்பாலாஜி பதவிவிலக வேண்டும் என கரூர் பா.ஜ.க தலைவர் கோரிக்கை விடுத்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலுள்ள சரத்துகளை தெளிவாக படித்துப்பார்க்க வேண்டும். படித்து பார்க்க தெரியவில்லை எனில் படித்த வழக்கறிஞர் ஒருவரிடம் அது குறித்து கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வேலைவெட்டி இல்லாத நபர் ஆவார். அத்துடன் அவர் படித்தமுட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக்கொள்வார். அவரைப் போன்றே அவரது கட்சியின் மாவட்ட தலைவரும் செயல்படுகிறார் என அமைச்சர் பதிலளித்தார்.