Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவரு கூட இருந்துகிட்டே இப்படி செஞ்சா சும்மாவா விடுவாங்க…. பெண் எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கணவன் கண்டித்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த உமா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் காதல் திருமணத்திற்கு இரு வீட்டார்களும் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே இவர்கள் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வந்தனர். இந்தநிலையில் உமாதேவிக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, தினமும் அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

இதனை கண்டுபிடித்த பாலகிருஷ்ணன் மனைவியை கண்டித்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் உமா அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவர், உமாவை கண்டித்ததில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ந்த கணவர் இரும்பு உளியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |