Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரு செய்வது ரொம்ப தப்பு…! “தாய்நாடும் நமக்கு முக்கியம்”…. பொல்லார்ட்டை வறுத்தெடுத்த “ஆகாஷ் சோப்ரா”….!!

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பொல்லார்ட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் படுதோல்வியடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மேற்கு இந்திய தீவு அணியில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஐபிஎல் தொடரில் அளவுக்கு அதிகமாக ரன்களை குவித்த பொல்லார்ட் டி20 தொடரில் தனது திறமையை காண்பிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பொல்லார்ட்டை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது இந்தியாவுக்கு எதிரான டி20 மேற்கிந்திய தீவுகள் போட்டியில் விளையாடவே ஆர்வம் இல்லாதவர் போல் பொல்லார்ட் காட்சியளித்தார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பொல்லார்ட்டின் செயல்பாடுகள் தாய் நாட்டை விட மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே அதிக ரன்களை குவிப்பேன் என்பது போல் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். இவருடைய இந்த செயல்கள் மிகவும் தவறு என்றும் தாய் நாடும் நமக்கு மிக மிக முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |