திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக வி.வி ராஜன் செல்லப்பா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் நிற்கும் தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் வி.வி ராஜன் செல்லப்பா, அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், நான் இத்தொகுதியில் வெற்றி பெற்றால்,”தனியார் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு மையத்தினை” உருவாக்குவேன் என்றார். மேலும் அவர் இத்தொகுதியில் அரசு கலைக் கல்லூரியை அமைப்பேன் என்றும் கூறினார். இதனையடுத்து அவர் பல நலத்திட்டங்களை எடுத்துக்கூறி திருப்பரங்குன்ற தொகுதியில் பொதுமக்களிடம் வாக்கினை சேகரித்தார்.