Categories
தேசிய செய்திகள்

இவரு நடக்குறதே சரி இல்லையே…. சோதனை செய்த அதிகாரிகள்…. சிக்கிய தங்கம்…!!

கர்நாடகாவில் சர்வதேச விமான நிலையத்திற்கு  தங்கம் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் கடத்தல் நடப்பதை தடுப்பதற்க்காக சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று துபாயில் இருந்து மங்களூருக்கு வந்த விமானத்தில் உள்ள பயணிகளிடம்  வழக்கம்போல சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்த பயணியின் உடமைகளை சுங்கவரித்துறையினர் தீவிர சோதனை செய்தபோது அதில் கம்பி வடிவில் தங்கத்தை அவர்  கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நபரிடமிருந்து ரூ. 16.52 லட்சம் மதிப்பிலான 350 கிராம் தங்கத்தை சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் அந்த நபரை காவல்துறையினர் கைது  செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |