ஐபிஎல் கிரிக்கெட் 15-வது சீசனுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை எடுத்துள்ளது. இதில் 7 பேர் வெளிநாட்டு வீரர்களும், 14 பேர் உள்நாட்டு வீரர்களும் இருக்கிறார்கள். இவர்களை வாங்கிய பிறகு 45 கோடியில் 2.85 கோடி ரூபாய் இருந்துள்ளது. இந்த அணியில் ஏற்கனவே தோனி, ஜடேஜா , ராஜ் மொயின் அலி ஆகியோரை சி.எஸ்.கே தக்கவைத்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள தொகையை பயன்படுத்தி ஷாருக்கான் போன்ற வீரர்கள் கூடுதல் தொகை கொடுத்து வாங்கி இருக்கலாம் என பலரும் குறை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சி.எஸ்.கே ஏன் சுரேஷ் ரெய்னாவை வாங்கவில்லை என்பது தொடர்பாக நியூசிலாந்து நாட்டின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டூல் பேட்டியளித்துள்ளார், அதில் “ரெய்னா ஒரு சிறந்த வீரராக இருந்தாலும் தோனியின் நம்பிக்கை அவர் இழந்துவிட்டார். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது அவர் அணியில் இருந்து விலகி இருக்கக் கூடாது , அவர் விலகியதுதான் தோனிக்கும், நிர்வாகத்திற்கும் அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது.
மேலும் கிரிக்கெட்டை பொருத்தவரை ஒருவர் மீது நம்பிக்கை போய்விட்டால் பின்னால் சேர்க்கப்பட மாட்டார்கள். இதில் ரெய்னா தனிப்பட்ட காரணத்திற்காக அணியில் இருந்து விலகியதாக கூறினாலும், அதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன் பின்னர் வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போதும் அவர் தனது திறமையை நிரூபிக்க வில்லை. மேலும் பாமவுட்டில் இருந்ததால்தான் ஏலத்தில் எடுக்கவில்லை” என கருதப்படுகிறது. இது குறித்து பேசிய தலைமை நிர்வாகி காசிவிஸ்வநாதன் அணியில் எதிர்கால திட்டத்தில் ரெய்னாவின் பங்கு இல்லை என்பதால் ஏலத்தில் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.