Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவரே இப்படி பண்ணிட்டாரு…. டாஸ்மாக் முன்னாடி உட்கார்ந்த எம்எல்ஏ…. பரபரப்பான திருப்பூர்…!!!

பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பெரும் இடையூறாக அமைகிறது. இதனால் இப்படி இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன்படி திருப்பூர் கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு பக்கத்தில் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரி பெண்களுக்கு, குடிகாரர்களால் இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்து வந்தது.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றி விடுவோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால் கடையை அகற்றாமல் கடைக்கு தேவையான மதுபானங்கள் இறக்கி வைக்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜூ ஆகியோர் கடை முன் சார்ஜர் போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் கடையை அகற்றுவதாக உறுதியளித்ததையடுத்து அங்கிருந்த மக்கள் மற்றும் எம்எல்ஏ தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |