சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த வெங்கட சந்திப் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
Categories