நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல் ஒட்டி, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அறிவு சக்தி, காளீஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்த களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை கிரிமினல், முதலைக்கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய் உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள் என்பன உள்ளிட்ட பல வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என மக்களவை செயலகம் வெளியிட்டு இருக்கின்ற பட்டியலில் இருக்கும் வார்த்தைகளை உறுப்பினர்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் விலைவாசி உயர்வு பற்றி விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி கனிமொழி ஜிஎஸ்டி விலைவாசி உயர்வு பெட்ரோல், டீசல் விலை என மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே பேசும்போது நாட்டில் வெங்காயம் விலை குறைந்து விட்டது. தக்காளி விலை குறைந்துவிட்டது என்றெல்லாம் சொல்கின்றார். இந்த இரண்டையும் வைத்தும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பமும் மூன்று வேளை சட்னி அரைத்து சாப்பிட முடியுமா ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வேலைக்கு ஒரு உணவு சமைக்க தேவைப்படும் பொருட்களை வாங்க கூட முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் என காட்டமாக பேசியுள்ளார்.
கனிமொழியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசி நிர்மலா சீதாராமன் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான விலையை கிட்டத்தட்ட இரண்டு முறை குறைத்து விட்டது. ஆனால் உங்களுடைய அரசாங்கம் மாநிலத்தில் ஏன் விலையை குறைக்கவில்லை ஜிஎஸ்டி வரைக்கும் கூடுதலாகவில்லை நிர்ணயம் செய்து தமிழகத்தில் விற்கப்படுகின்றன. மத்திய அரசு விலையை குறைக்கும் ஆனால் நாங்கள் குறைக்க மாட்டோம் என முதலை கண்ணீர் வடித்த கதை இது என ஆவேசமாக பேசி உள்ளார். ஆனால் முதலை கண்ணீர் என்பது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியலில் உள்ள போது மத்திய நிதி அமைச்சர் அந்த வார்த்தையை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதோடு அவர் ஆணவமாக பேசுவதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் நிர்மலா பேசும் வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரின் ஆணவ பேச்சு இது அண்டை நாளான வங்கதேசத்தையும் அவர் இழிவு படுத்தி இருக்கிறார் என பதிவிட்டு இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன் ஏழைகளின் காய்கறி என சொல்லப்படும் வெங்காய விலை ஏற்றம் தொடர்பான விவாதத்தின் போது நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை வெங்காயம் பூண்டு சேர்த்துக் கொள்ளாத குடும்பம் என்னுடையது என தனது சாதி பெருமை குறித்து நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். வெங்காயம் பற்றி அவரது இந்த பேச்சு எளிதாக கடந்து செல்ல முடியாத ஜாதி அரசியல் நாட்டின் நிதி அமைச்சராக இருக்கும் ஒருவர் சாமானிய மக்களின் நிலையை புரிந்து கொண்டு அதற்கு பதில் அளித்து இருக்க வேண்டும். ஆனால் நிதியமைச்சரோ அதிமேதாவிதனமாக செயல்படுவதாக காட்டிக் கொண்டு தனது சாதியத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார்.
அதேபோன்று ஹோட்டல் உணவுப்பொருட்களின் விலைக்கு அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு அரசு எந்த வரிவிதிப்பையும் விதிக்கவில்லை என அமைச்சருக்கு உரிய பொறுப்பில்லாமல் பேசியுள்ளார் ஹோட்டல்களுக்கு ஏன் செல்கிறீர்கள் என மறைமுகமாக சாமானிய மக்களின் மிகவும் கேவலப்படுத்தி இருக்கின்றார். மேலும் உக்ரைன் ரஷ்யா போரின்போது இந்திய மாணவர்களை மீட்பதில் ஏற்படும் தாமதம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் சொந்த நாட்டில் படிக்காமல் உக்ரைன் சென்ற மாணவர்களை என் தோளிலா தூக்கி வர முடியும் என ஆணவமாக பேசியுள்ளார். இவ்வாறு நிர்மலாவின் ஒவ்வொரு பேச்சும் ஆணவ தொணியிலே இருப்பதாகவும் சாமானிய மக்களை அவரை போல யாரும் அத்தனை எளிதாக அவமானப்படுத்தியது இல்லை எனவும் குற்றம் சாற்றப்பட்டு வருகிறது.