சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு சில இடங்களில் வேகமாக பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சமீப காலங்களாக கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பிரதமர் என அனைவரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கே.பி. சர்மா மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பால்கோட்டில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது