லதா ரஜினிகாந்தியின் அதிரடி நடவடிக்கையால் நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்வதற்கு காலஅவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் அண்மையில் இருவரும் பிரிய போவதாக தங்களது இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும், நண்பர்களும் அவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் அதிரடி நடவடிக்கையால் நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்வதற்கு கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த பைனான்சியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தனுசின் படத்திற்கு இனி யாரும் பணம் கொடுக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இயக்குனர்களையும் தொடர்புகொண்ட லதா ரஜினிகாந்த் இனி தனுஷை வைத்து எவரும் படம் பண்ண வேண்டாம் என்று கூறியுள்ளார். இவ்வாறு இருக்க லதா ரஜினிகாந்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர்களில் அதிகாரம் படைத்த ஒருவர் தனுஷிடம் இது குறித்து பேசியுள்ளார். ஆகையினாலேயே நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்வதற்குக் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.