கொரோனா தடுப்பூசி போடாதவர்களால் தடுப்பூசி செலுத்தியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனட நாட்டில் டொரோண்டோ பல்கலைக்கழகம் தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் போடாதவர்களை கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களின் நோய் எதிர்ப்புதிறன் அதிகமாகவே இருந்தாலும் தடுப்பூசி போடாதவர்களிடமிருந்து புதிதாக கொரோனா தொற்று பரவக்கூடும் என்று இந்த ஆய்வறிக்கை எச்சரித்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2 குழுக்களை ஒன்றாக ஆய்வில் ஈடுபடுத்தியதில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைவிட, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் குறைவான ஆபத்தே உண்டாகிறது என்று கனடியன் மெடிக்கல் அசோசியேஷன்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.
அதேபோன்று தடுப்பூசி ஒன்றே கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் ஆயுதம் ஆகும். மேலும் உருமாறும் வைரஸ்களிலிருந்து காத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் பூஸ்டர் டோஸ் பயன்படும் என இந்த ஆய்வறிக்கையில் கனடா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், 2ஆம் தவணை தடுப்பூசி வீடுகளுக்கே சென்று போடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.