மத்திய தொழிலாளர் நல அதிகாரி மாணவ-மாணவிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மத்திய தொழிலாளர் நல அதிகாரி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சினிமா தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் பீடி சுற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். இதில் 1-ம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூபாய் 25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள்ளும், மற்ற மாணவர்கள் மாணவர்கள் செப்டம்பர் 31-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.