உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் என இருதரப்பிலும் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போர் காரணமாக உக்ரைன் பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களைத் தேடி தஞ்சமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் போரை நிறுத்துமாறு ரஷ்யாவை பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் இருநாடுகளுக்கிடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய துருப்புகள், உக்ரைனில் நடத்தியுள்ள போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை வழங்கும் தகவல் தொடர்புகளை தனது நாட்டின் பாதுகாப்பு சேவை இடைமறித்து பதிவு செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் சி.பி.எஸ். டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.