Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து…? இனி பொருள் வாங்கவே முடியாது…. மத்திய அரசு அதிரடி…!!!

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக நியாய விலை கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். இந்த நிலையில் நிறைய பேர் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறன. அரிசி, கோதுமை ஆகியவற்றை மலிவு விலைக்கு வாங்கி அவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தகுதி உள்ள பலருக்கும் ரேசன் உதவிகள் கிடைக்காமல் போகின்றன.

இவ்வாறு தகுதியில்லாதவர்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனவே தகுதி இல்லாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவு மாநில அரசுகளுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி இல்லாதவராக இருந்தால் அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. கேரள மாநிலத்தில் ஆபரேஷன் எல்லோ என்ற பெயரில் தகுதி இல்லாத மற்றும் மோசடி செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளை மாநில அரசு ரத்து செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |