தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பணியாக கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனியார் கிளினிக்குகளில் பரிசோதனை செய்து கொள்ளும் சிலர் தங்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல பயந்து கொண்டே வீட்டிலேயே இருப்பதால் தொற்று பரவும் அபாயம் அதிக அளவு ஏற்படுகிறது.
அதனால் சென்னையில் கொரோனா அறிகுறி உடன் வரும் நபர்களின் விவரங்களை தனியார் கிளினிக்குகள்,மருத்துவமனைகளில் தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கிளினிக்குக்கு வரும் நபர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், தொற்று அறிகுறி உள்ளிட்ட விவரங்களை [email protected] என்ற இணையதளத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.