Categories
தேசிய செய்திகள்

“இவர்களுக்காக எங்கள் அரசு எப்போதும் பாடுபடும்”… பிரதமர் மோடி கருத்து…!!!!!

அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இது பற்றி அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது, நாட்டின் வளர்ச்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களாக  பணியாற்றும் சகோதரர்கள்,சகோதரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

மேலும் இதுபோன்ற கோடிக் கணக்கான தொழிலாளர்கள்  பயன் பெறுவதற்காக எங்கள் அரசு எப்போதும் பாடுபட்டு  வருகிறது. பல்வேறு திட்டங்கள் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதாக அமலில் இருந்தாலும், பெருந்தொற்று பாதிப்பின் போது அவர்களுக்கு உதவுவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது  என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Categories

Tech |