Categories
சினிமா

இவர்களுக்காக காத்திருக்கும் திரையுலகம்…. கல்லூரி நிகழ்வில் பேசிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்…..!!!!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் “சுந்தர பாண்டியன்” ஆகும்.  கடந்த 2012 ஆம் வருடம் வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்துக்குப் பின் “இது கதிர்வேலன் காதல்” மற்றும் “சத்ரியன்” போன்ற படங்களை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கினார். அண்மையில் இவர் இயக்கிய “கொம்பு வச்ச சிங்கம்டா” படம் திரையரங்கில் வெளியாகியது. இப்போது தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள புது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரை அரங்கில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர்பிரபாகரன் செயின்ட்தாமஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது “நான் பொதுவாக கல்லூரி விழாக்களில் அதிகம் பங்கேற்பதில்லை. ஏனெனில் மாணவர்களளின் மீது சினிமாவை திணிக்ககூடாது என்பதற்காகத் தான். ஆனால் தற்போது விழாவில் பங்கேற்க காரணம், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் விழா என்பதால் தான் வந்தேன்.

விஷுவல் கம்யூனிகேஷன் துறை மட்டும்தான் மாணவர்கள் விரும்பி பயிலும் ஒரு படிப்பு ஆகும். இதில் பல்வேறு மாணவர்கள் உணர்ந்து ரசித்து படிக்கிறார்கள். ஆகவே உங்களுக்காக திரை உலகம் காத்துக்கொண்டிருக்கிறது. கீழேயமர்ந்து இருக்கும் மாணவர்களில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட துறைகளில் சிறந்து திகழவேண்டும். இதற்காக யூடியூப் மற்றும் ஓடிடி தளங்களில் மாணவர்கள், தங்களின் திறமையை நிரூபிக்க தேவையான இடங்கள் இருக்கிறது. இந்த விழாவில் தலைமை ஆசிரியர் தங்கவேல், தலைமை செயலாளர் பிஜு சாக்கோ, இயக்குனர் விருமாண்டி போன்றோர் பங்கேற்றனர்.

Categories

Tech |