Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது…. 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்களை வழங்கிய எம்.பி…..!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், பரிமாள கலையரசன், துணை தலைவர் சுமதி பிரபாகரன், பூங்கொடி நல்லதம்பி, ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சி. என். அண்ணாதுரை எம். பி. 519 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர  நாற்காலி, செல்போன், காதொலி , சேர்க்கை கால் என 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்களை வழங்கியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது. நமது தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளி மக்களுக்கு  தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள்  பயனடைந்து வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |