விளையாட்டு வீரர்களுக்கான ரொக்க விருதுகள், தேசிய நலன் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் டெல்லியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், குடிமக்களுக்கு அதிகாரம் அளித்ததன் மூலமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியை குறைப்பதன் மூலமும் அமைப்பு மற்றும் வசதிகள், பிரச்சனைகள், தீர்வுகள், அதிகபட்ச ஆளுகையின் பிரதமரின் பார்வையை முன்னெடுத்து செல்வதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய மற்றொரு படி.
மேலும் இந்த திருத்தப்பட்ட திட்டங்கள் சாதனை நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பலன்களை வழங்க அதிக வெளிப்படைதன்மை மற்றும் பொறுப்புணர்வை வழங்கும் எனவும் இனி எந்த ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரர்களும் அவரவர் தகுதிக்கு ஏற்ப மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.