பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகையினை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பேரவை கூட்ட தொடரில் 06. 9 2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானிய கோரிக்கையின் போது அறிவித்த அறிவிப்புக்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிக்கையாளர் நல வாரியம் ஒன்றை உருவாக்கி மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத்திட்ட உதவிகளுடன், திருமண உதவித் தொகையாக ரூ. 2000 (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) வழங்கப்படும் எனவும் ஆணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் திருமண உதவித் தொகையினை ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து மூன்றாயிரம் ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணை வெளியிட்டது தமிழக அரசு.