தமிழ்நாடு பிராமணர் சங்க கிளையின் தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நேமத்தான் பட்டி பகுதியில் அமைந்துள்ள பெரிய கோவில் வளாகத்தில் வைத்து தமிழ்நாடு சங்க பிராமணர் கூட்டத்தின் கானாடுகாத்தான் கிளை தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராமசுவாமி, துணை தலைவர் முத்துசாமி, புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாஷ், திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கானாடுகாத்தான் கிளையின் கவுரவ தலைவராக ராஜகண்ணப்பன், கமலநாதன், துணைத்தலைவராக ரமணி, பொதுச்செயலாளராக ரமேஷ், பொருளாளராக ராஜமணி, ஆலோசகராக சீனிவாசன், மகளிர் அணி செயலாளராக லலிதா சுப்புலட்சுமி உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு பல தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளது.