Categories
தேசிய செய்திகள்

“இவர்களுக்கு அனுமதி இல்லை”…. ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாக புகார்…. இண்டிகோ நிறுவனம் விளக்கம்….!!!!!!!

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமான நிறுவன ஊழியர்கள் விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

ராஞ்சியில் இருக்கும்  விமான நிலையத்தில் இன்டிகோ விமான நிறுவனத்தின்  ஊழியர்கள், ஒரு பெற்றோர் தனது  மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த காரணத்தினால்  விமானத்தில் ஏற விடாமல் தடுத்திருக்கின்றனர் என்று  சமூக வலைத்தளங்களில் நேற்று பதிவிடப்பட்டிருந்த தகவல் கண்டனத்திற்கு உள்ளாக்கியது.  அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, மாற்றுத் திறனாளி குழந்தை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாது என்ன இன்டிகோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரால் மற்ற பயணிகளுக்கு ஆபத்து எனவும் அவர் பயணத்திற்கு தகுதியானவராக இருப்பதற்கு முன்பு முதலில் அவர் சாதாரண மனிதனைப் போல இருக்க வேண்டும். மேலும் மது போதையில் இருப்பவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை  அதைப்போன்று தான்  இந்த பயணியும்  என பதிவிடபட்டிருக்கின்றது.

இந்த நிலையில்  இண்டிகோ விமான நிறுவனம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மே 7ஆம் தேதி  சிறப்பு திறன் கொண்ட ஒரு  குழந்தை தனது குடும்பத்தினருடன் விமானத்தில் ஏற முடியவில்லை. மேலும் அவர் பீதியில் இருந்துள்ளார். கடைசி நிமிடம்வரை மைதான ஊழியர்கள் அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை.

அவர் பயத்தில் இருந்து இருக்கின்றார். அதனால் விமான நிறுவனம் அந்த குடும்பத்திற்கு ஒரு ஓட்டலில் தங்க வசதியை வழங்கி அவர்களை வசதியாக தங்க வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை அந்த குடும்பம் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி விமானத்தில் பயணம் செய்துள்ளனர். மாதந்தோறும்  குறைந்தது  25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சிறப்பு திறன் கொண்ட பயணிகள் இண்டிகோ நிறுவன விமானங்களில் பயணம் மேற்கொண்டு  வருகின்றனர்.

மேலும் இன்டிகோ ஊழியர்களாக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக இருப்பது இண்டிகோ பெருமை அடைகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக சமூக வலைதளங்களில் நேற்று பதிவிடப்பட்ட கண்டனத்திற்கு உள்ளான தகவல் பொய் என இண்டிகோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Categories

Tech |