ஸ்விட்ஸர்லாந்தில் பிரிட்டனை சேர்ந்த குடும்பத்தினர் கேரவன் திருடியதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாஸல் மண்டலத்தின் Duggingen என்ற பகுதியில் கடந்த வருடம் மே மாதம் பிரிட்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சுமார் 78 ஆயிரம் பிராங்குகள் மதிப்புடைய கேரவன் ஒன்றை திருடிய போது காவல்துறையினரிடம் கையும் களவுமாக மாட்டினர். அதாவது அந்த கேரவனை மற்றொரு வாகனத்துடன் சேர்த்து இழுத்து செல்ல முயன்றபோது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டனர்.
இதுமட்டுமல்லாமல் கேரவனின் ஓட்டுநர் தப்ப முயன்றுள்ளார். அவரை பிடித்து ரத்த பரிசோதனை செய்ததில் அவர் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த குடும்பத்தினர் கடந்த 10 மாதங்களாக சுவிட்சர்லாந்தின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் புதன் கிழமையிலிருந்து இந்த வழக்கு குறித்த குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அந்த குடும்பத்தினர் திருடுவதற்கு என்று அடிக்கடி ஸ்விஸிற்கு வந்ததும், திட்டமிட்டு திருடியதும் தெரியவந்திருக்கிறது. மேலும் இதுவரை 2 ,66,000 பிராங்குகள் மதிப்புடைய இரண்டு கேரவன்கள் திருடப்பட்டிருக்கின்றன. இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த குடும்பத்தினருக்கு மூன்று வருடங்கள் 8 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் சுவிட்சர்லாந்தில் 8 வருடங்களுக்கு நுழைய முடியாத வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அரசு சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கைதான அந்த குடும்பத்தினர் கொள்ளை கும்பல்காரர்கள் தான் எங்களை மிரட்டி திருடச் சொன்னதாக கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் நாங்கள் கடன்ப்பட்டிருப்பதால் கட்டாயப்படுத்தி திருட வைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.