அதிமுகவின் துவக்க விழாவை கொண்டாட முடியாமல் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து வெளியேறினார். பின்னர் 1972- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி அதிமுகவை தொடங்கினார். அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்று 51-வது ஆண்டு துவக்க விழாவை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் கொண்டாட அனுமதி கேட்டனர். ஆனால் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதுவே நமது ஆட்சியாக இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்று அவரிடமே கேட்டு ஆதங்கப்படுகின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள். மேலும் தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் கொடியேற்றி தனியாக கொண்டாடினார் ஓ. பன்னீர்செல்வம். மேலும் சசிகலா உள்ள எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் இருக்கும் பள்ளி கலையரங்கில் கொண்டாட விரும்பியுள்ளார்.
அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலை அமைந்திருக்கும் வளாகத்தில் விழா நடத்த வேண்டிய நிலை சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் தோழியாக அறியப்படும் சசிகலாவின் நிலைமை இப்படி என்றால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் திமுக ஆட்சியையும், கட்சியையும் முதல்வராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் வழி நடத்திய இபிஎஸ் நிலை அவரின் ஆதரவாளர்களை நொந்து கொள்ளும்படி ஆகிவிட்டது. அதிமுக 51-வது ஆண்டு துவக்க விழாவை ஒட்டி எம்ஜிஆரின் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டு இருந்தாராம் இபிஎஸ். இந்த நிகழ்ச்சிக்காக சென்னை புறநகர் மாவட்ட திமுக நிர்வாகம் சார்பில் நந்தம்பாக்கம் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் எம்ஜிஆர் வளாகத்தில் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால் வேறு பொது நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று அந்த வளாகத்தில் உள்ள பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாம். இதனால் கட்சியின் நிர்வாக நாளை நாம் விரும்பும் படி நிறுவன எம்ஜிஆரின் இல்லத்தில் கொண்டாட முடியவில்லையே, இதுவே நமது ஆட்சியாக இருந்தால் இப்படி நேர்ந்திருக்குமா? என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கிறார்களாம் இபிஎஸ் தரப்பு.