தமிழகத்தில் பணியிட மாறுதல் கிடைத்தும் காவல்துறையினர் சிலர் வீட்டை காலி செய்யாமல், முதல்வர் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கான குடியிருப்பில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் முறையாக அனுமதியின்றி வசிப்போர் என்று வகைப்படுத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பாக வீட்டை ஏன் காலி செய்யவில்லை என்று விளக்கம் கேட்டு டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் முறையான அனுமதி பெறாமலும், விளக்கம் அளிக்காமலும் தொடர்ந்து குடியிருந்து வருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு வழக்கமான வாடகையை விட மூன்று மடங்கு வாடகையை சம்பளத்தில் பிடித்தம் செய்யும்படி சென்னை அடையாறில் உள்ள பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி காவல்துறையினரின் சம்பளத்தில் குறைந்த பட்சமாக 5,100 ரூபாய் முதல் அதிகபட்சமாக 64 ஆயிரத்து 200 வரை வாடகை பிடித்தம் செய்யப்பட இருக்கிறது.