தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் மருத்துவ பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் பணி இன்றியமையாதது. வார முழுவதிலும் தடுப்பூசி போடும் பணியில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. அதனால் குருவினால் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் வாரம் ஒரு முறை விடுப்பு வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசிசெலுத்துவதற்காக ஓய்வின்றி பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு வார விடுமுறை அளிக்க கோரி கிராம செவிலியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 24 மணி நேரமும் நடைபெறுகிறது. விடுமுறையும் இல்லை. அதனை காலை 8 மணி முதல் மாலை 4 மணி என மாற்ற வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் கூடுதல் பணியாற்ற சொல்லக்கூடாது என்று பல்வேறு கோரிக்கைகளை மருத்துவ சங்கத்தினர் முன்வைத்த நிலையில் இனிவரும் காலங்களில் வார விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.