டெலிவரி செய்யும் நபர் ஒருவர் யூதர்களுக்கு உணவு வழங்க மறுத்ததால் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
கிழக்கு பிரான்சில் இருக்கும் நீதிமன்றத்தில் யூத-விரோத பாகுபாடுகளை முன்னெடுப்பதாக உணவு டெலிவரி டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு தண்டனை விதித்துள்ளது. யூதர்களுக்கென்றே செயல்பட்டுவரும் சில உணவகங்கள் இந்த நபர் மீது புகார்களை அளித்துள்ளது. அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று, அல்ஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் அறிவித்துள்ளார். பிரான்சில் சில உணவகங்கள் யூதர்களுக்காக மட்டுமே உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறது.
இந்த உணவகங்கள் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளன. அதாவது டெலிவரி செய்யும் நபர் ஒருவர் மீது புகார்கள் அதிகமாக எழுந்துள்ளது. இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு மாறாக நாட்டில் தங்கியிருந்து பணியாற்றியதாக அந்த நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு நான்கு மாதங்கள் அவருக்கு சிறை தண்டனையும் விதிப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நபர் யூதர்களுக்கு என்னால் உணவை வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தண்டனை காலம் முடிந்த பின்பு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி தான் ஆக வேண்டும் என்று பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.