Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…. மும்பை விமான நிலையத்தில் அதிரடி…!!!

மும்பை விமான நிலையத்தில் உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பில்லாத சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. 

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் தம் சொந்த நாடுகளுக்கு, பல்வேறு நாட்டு மக்களும் திரும்பியுள்ள நிலையில், இந்திய அரசும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் இந்தியர்களுக்காக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்ற சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி பகுதி ஒன்று தனியாக அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் இந்தியாவிற்கு வரும் குடிமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பாதிப்பில்லாத ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த வகையில் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாத நிலையில், அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை விமான நிலையத்தில் வைத்து நடத்தப்படும் என்றும்  இதற்கான செலவையும் விமான நிலையமே ஏற்று கொள்கிறது.

மேலும் பயணிகளின் பரிசோதனை முடிவில் பாதிப்பில்லை என முடிவு கிடைத்தபின் அவர்கள் அங்கிருந்து புறப்படலாம். ஆனால் கொரோனா பாதிப்பு யாருக்கேனும் இருப்பது அறியப்பட்டால், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |