தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சி தனியாகவும், ஊராட்சியில் பணியாற்றுவோருக்கு தனியாகவும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதிக ஊதியம் வழங்கப்பட்டால் அதையே தொடரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.