கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற காவல்துறையினருக்கு 4 நாள் விடுமுறை அளித்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்..
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.. அதன்படி, கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது.. நாளை இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. அதனை தொடர்ந்து வாக்கு பதிவு எண்ணிக்கை அக்.,12ஆம் தேதி நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன் போலீசாருக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்… அதாவது, அக்டோபர் 9ஆம் தேதி தேர்தல் பணி முடிந்த பின் தொடர்ந்து 4 நாட்கள் போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.. தேர்தல் பணிக்கு சென்றவர்களுக்கு விடுமுறை அளித்ததால் கடலூர் மாவட்ட போலீசார் மகிழ்ச்சியில் உள்ளனர்…